பிரியாணி மசாலா இரண்டு வகை உள்ளது.
1. மட்டன் பிரியாணி மசாலா &சிக்கன் பிரியாணி மசாலா
சிக்கன் பிரியாணி & மட்டன் பிரியாணி மசாலாவிற்கு அளவுகள் சொல்கிறேன்.
சோம்பு, சீரகம், ஜாதிப்பத்திரி, கசகசா, இலவங்கப் பட்டை ( சுருள் பட்டை அது சற்று இனிப்புத் தன்மையுடையது ), பிரிஞ்சி இலை, கல்பாசி, ரோஜா மொக்கு, ஏலக்காய், கிராம்பு ( மற்ற பொருட்களை விட சற்றுக் கூடுதலாக ), மிளகாய், காய்ந்த கொத்தமல்லி விதைகள், அன்னாச்சிப் பூ, சுருள் பாசி, சாதாப் பட்டை, விரலி மஞ்சள் இவையனைத்தும் தலா – 10 gm. சோம்பு மற்றும் கிராம்பு மட்டும் – 20gm.
அனைத்தையும் ஒரு வாணலியில் எண்ணெய் இல்லாமல் மிதமான தீயில் வறுத்து ஆறவைத்து மிக்சியில் நன்றாக அரைத்து அதுவும் நன்றாக ஆறியதும் ஒரு Air Tight Container – ல் போட்டு காற்றுப் புகாமல் மூடி வைத்து தேவைப்படும் போது உபயோகிக்கவும்…
சூப்பரான கம கம வாசனையுடன் மட்டன் பிரியாணி மசாலா ரெடி..!