Wednesday, November 29, 2023
பொதுவிஜயதசமியின் சிறப்புகள்

விஜயதசமியின் சிறப்புகள்

ஐப்பசி மாதம் 7_ம் நாள் செவ்வாய் கிழமை 24-10-2023

நவராத்திரி ஒன்பதுநாள்களும் அம்பிகை வழிபாட்டுக்கு உகந்தன.

முதல் மூன்றுநாள்கள் துர்கையையும் இரண்டாம் மூன்று நாள்கள் லட்சுமியையும் மூன்றாம் மூன்றுநாள்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுவது வழக்கம்.

இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளின் வடிவமாகிய முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்சி தரும் தினம் விஜயதசமி.

ஒன்பது நாள்கள் அம்பிகை அசுரர்களோடு போர்புரிந்தாள். அதனால் வீராவேசமாகத் திகழ்ந்த தேவி ‘சாந்த சொரூபி’யாக வரம்தரும் அம்பிகையாகக் காட்சிதரும் நாள் விஜயதசமி. இந்த நாள் குறித்த சில ஆன்மிகத் தகவல்கள் உங்களுக்காக.

ராமபிரான் ராவணனோடு யுத்தம் செய்தார். ஒன்பது நாள்கள் நடைபெற்ற போரின்முடிவில் விஜயதசமி நாளில்தான் அவர் ராவணனை அழித்து வெற்றிபெற்றார் என்கின்றன இதிகாசங்கள். பத்து தலைகளை உடைய ராவணனை வதம் செய்ததால் இந்த நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமி ‘தசரா’ என்றும் அழைக்கப்படுகிறது (தச ஹரா – தசரா). அதன் அடையாளமாகத்தான் வட இந்தியாவில் இன்றும் ராம்லீலா என்று நிகழ்த்தப்படுகிறது.

மகாபாரதத்தில் அஞ்ஞாத வாசம் புகுவதற்கு முன்பு பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னிமரத்தில் மறைத்துவைத்து தாய் துர்கையை வணங்கி ஸ்தோத்தரித்தனர். பின்பு ஓராண்டு முடிந்து திரும்பிவந்து துர்கையை மீண்டும் போற்றி வழிபட தாய் துர்கை அவர்களின் ஆயுதங்களை வழங்கி ஆசி அருளிய நாள் விஜயதசமி.விஜய தசமி தினத்தன்று ஶ்ரீஆயுர் தேவியைப் போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

விஜயதசமி தினத்தன்று சில பெருமாள் கோயில்களில் வன்னி மரக்கிளையை வைத்து, அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து, பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்துகொண்டால், கிரக தோஷங்கள் விலகி ஓடிவிடும் என்று நம்புகிறார்கள்.மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமி தினத்தன்று வழிபடுவதோடு அதன் இலைகளையும் பறிப்பர்.

அங்கு வன்னிமரத்தை செல்வம் தரும் மரமாகக் கருதுகின்றனர். இளைஞர்கள் இந்த நாளில் வன்னி இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து அவர்களது ஆசியைப் பெறுவார்கள்.பண்டாசுரனை அழிக்கத் தொடங்கிய போரில், அம்பிகை அவனை சம்காரம் செய்ய முடியாமல் போர் நீண்டது. அப்போது தேவி, ஈசனை நினைத்து வேண்டினாள். ஈசனும் அம்பிகையை ஆசீர்வதித்தார். ஈசனின் அருளோடு அசுரனை எதிர்த்த அம்பிகையின் சினம் தாங்காமல் பண்டாசுரன் வன்னி மரத்தில் ஒளிந்தான்.

இதைக்கண்டு கொண்ட அம்பிகை வன்னிமரத்தை வெட்டி, பண்டாசுரனை வதம் செய்தாள். இதுவே ‘வன்னிமர வேட்டை’ என இன்றும் கொண்டாடப்படுகிறது.எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அப்படிப்பட்ட வெற்றியை நமக்கு அருளும் திருநாள் விஜயதசமி. இந்த நாளில் புதிய தொழில்கள் தொடங்கினால் சிறக்கும் என்பது நம்பிக்கை. மேலும் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க, இசை, பாட்டு, நடனம் போன்ற கலைகளைக் கற்கத் தொடங்கவும் இன்று உகந்த நாள். இந்த நாளில் அவரவர் தங்களின் குரு மற்றும் ஆசிரியரை சந்தித்து ஆசிபெறுவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை ‘அட்சராப்யாசம்’ என்பர்.

குலசை எனப்படும் குலசேகரப்பட்டினத்தில் ஒவ்வோர் ஆண்டு தசரா திருவிழா களைகட்டும். தங்கள் குறைகள் தீர முத்தாரம்மனிடம் வேண்டிக்கொள்வார்கள். அவர்கள் பிரார்த்தனையை அம்மன் பூர்த்தி செய்தபின் ஒருமண்டலகாலம் விரதமிருந்து தசரா திருவிழாவில் வேடமிட்டு வந்து அம்பாளை வழிபடுவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த விழாவில் பல்வேறு வேடங்களோடு பக்தர்கள் கூடுவதைக் காண்பதற்கு சிலிர்ப்பாகவும் கண்கொள்ளாக் காட்சியாகவும் இருக்கும். இந்த ஆண்டு குலசையில் பக்தர்களுக்கு வேடமிட்டு காப்புக்கட்ட அனுமதிக்கப்படவில்லை.

ஒன்பது நாள்கள் நவராத்திரி உற்சவமும் உள்பிராகாரங்களிலேயே நடைபெறுகின்றன. விரதமிருக்கும் பக்தர்கள் அவரவர் தங்கள் உள்ள ஊர்களிலேயே நேர்த்திக்கடன்களை செலுத்த கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் இந்த நோய்த்தொற்றுப் பிரச்னைகள் நீங்கி மீண்டும் விழாக்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று பக்தர்கள் அம்பாளிடம் வேண்டிச் செல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe Today

GET EXCLUSIVE FULL ACCESS TO PREMIUM CONTENT

SUPPORT NONPROFIT JOURNALISM

EXPERT ANALYSIS OF AND EMERGING TRENDS IN CHILD WELFARE AND JUVENILE JUSTICE

TOPICAL VIDEO WEBINARS

Get unlimited access to our EXCLUSIVE Content and our archive of subscriber stories.

Latest

Latest article

More article