விலை குறைவாக இருந்தாலும் வீரியம் கொண்டவை. சிறிய இடம் இருந்தாலும் பெருவாரியான கீரை வகைகளை நாமே பயிரிட்டுக் கொள்ளலாம். உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் கீரைகளில் உண்டு. யாரும் உங்களை கிள்ளுக்கீரையாக நினைத்து விடுகிறார்கள் என்று கவலைப் பட வேண்டாம்.
அன்றாடத் தேவையாய் அவசியம் ஒரு கீரையை உபயோகப் படுத்தினால் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். அப்படி என்ன தான் கீரைகளில் ஒளிந்துள்ளது அறிவோமா? அதற்கான பதிவே இது.
கீரைகளில் தான் எத்தனை வகை…இதனால் என்ன பயன்? அறிவோமா..
அகத்திக்கீரை
இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும். வயிற்றுப்புண் ஆற்றும்.
முசுமுசுக்கை கீரை
நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்..
தண்டுக்கீரை* குடல் புண் ஆற்றும் மலச்சிக்கல் போக்கும்.
காசினிக்கீரை
சிறுநீரக செயல்பாட்டை சீராக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
*சிறுபசலைக்கீரை*
சரும நோய்களைத் தீர்க்கும். பால்வினை நோயைக் குணமாக்கும்.
*பசலைக்கீரை*
தசைகளை பலமடையச் செய்யும்.
*பாலக்கீரை*
இரத்த விருத்திக்கும் சர்க்கரை நோய் சீராகவும் பயன் ஆகிறது.
*கொடி பசலைக் கீரை*
வெள்ளை விலக்கும். நீர் கடுப்பை நீக்கும்.*மஞ்சள் கரிசலை*கல்லீரலை பலமாக்கும். காமாலையை விலக்கும்.
*கரிசலாங்கண்ணி கீரை*
சளி இருமலை குணமாக்கும்
*முள் முருங்கைக்கீரை*
கபம் இருமல் நீக்கும். வயிற்றுப்பூச்சிகளை அழிக்கும்.
*குப்பைக்கீரை*
பசியைத் தூண்டும். வீக்கத்தை வற்ற வைக்கும்.
*அரைக்கீரை*ஆண்மையைப் பெருக்கும்*புளியங்கீரை*
சோகையை விலக்கும். கண் நோய் சரியாகும்.
*பிண்ணாருக்கு கீரை*
வெட்டையைப் போக்கும். நீர் கடுப்பைப் போக்கும்.
*பரட்டைக்கீரை*
பித்தம் கபம் நீக்கும்
*பொன்னாங்கண்ணி கீரை*
உடல் அழகுக்கும் கண்ணொளிக்கும் ஏற்றது.
*சுக்கா கீரை*
இரத்த அழுத்தம் சீராகும். மூலத்தை குணாமாக்கும்
*வெள்ளை கரிசலைக்கீரை*
இரத்த சோகை நீக்கும்.*முரங்கைக்கீரை*நீரழிவை நோக்கும். கண் பார்வை சீராகும். உடல் பலம் பெறும்.*வல்லாரைக்கீரை*மூளைக்கு பலம் தரும்.*முடக்காத்தான் கீரை*கை கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.*புண்ணக்கீரை*சிரங்கும் சீதளமும் விலகும்.*புதினாக்கீரை*இரத்தம் சுத்தமாகும் அசீரணம் போக்கும். *நஞ்சுமுண்டான் கீரை*விடம் முறிக்கும்.*தும்பைக்கீரை*அசதி சோம்பல் நீக்கும்*முருங்கைக்கீரை*சளி இருமலை குணமாக்கும். கண்களுக்கு நல்லது. உடல் பலம் பெறுவதற்கு காரணமாக இருக்கும்.*முள்ளங்கிக்கீரை*நீரடைப்பு நீக்கும்*பருப்பு கீரை*பித்தம் விலக்கும் உடல் சூடு தணிக்கும்.*புளிச்ச கீரை*கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் நோய் நீக்கும். ஆண்மை கூட்டும்.*மணலிக்கீரை*வாதத்தை குணப்படுத்தும் கபம் நீக்கும்.*மணத்தக்காளி கீரை*வாய் மற்றும் வயிற்றுப்புண் நீக்கும். தேமல் பூக்கும்.*முளைக்கீரை*பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமாகும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.*சக்கரவர்த்தி கீரை*தாது விருத்தியாகும்*வெந்தயக்கீரை*மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல் மற்றும் கல்லீரல் பலமாகும். வாத காச நோய் போக்கும்.*தூதுவளை*ஆண்மை தரும். சரும நோய் நீக்கும். சளித் தொல்லை அகற்றும்.*தவசிக்கீரை*இருமலை நீக்கும்*சாணக்கீரை*காயம் ஆற்றும்*வெள்ளைக்கீரை*தாய் பாலை பெருக்கும்*விழுதிக்கீரை*பசியைத் தூண்டும்*கொடி காசினிக்கீரை*பித்தம் தணிக்கும்*துயிளிக்கீரை* வெள்ளை வெட்டை விலக்கும்.*துத்திக்கீரை*வாய், வயிற்றுப்புண், அகற்றும் வெள்ளை மூலம் விலக்கும்.*காரக்கொட்டிக் கீரை*சீதபேதியை நீக்கும்.*மூக்கு தட்டைக் கீரை*சளியை நீக்கும்.*கொத்தமல்லிக்கீரை*வயிற்று உபாதைகள் நீக்கும்.*குமுட்டிக்கீரை*சர்க்கரை அளவைக் குறைக்கும்.*கற்பூரவள்ளிக்கீரை*பல் மற்றும் ஈறு பிரச்சனையைப்போக்கும்.*கீழா நெல்லிக்கீரை*மஞ்சள் காமாலையை குணமாக்கும்.*இவைகளில் பெரும்பாலான கீரைகள் நம்மைச் சுற்றியே கிடைக்கின்றன. சில கீரைகள் நாம் அன்றாடம் நடந்து செல்லும் வழிகளில் கூட இருக்கின்றன. ஆனால் நமக்கு அதுபற்றிய போதிய விழிப்புணர்வும் விவரமும் தெரியாததால் கண்டு கொள்வதில்லை. பயனறிவோம். பயன் கொள்வோம்.**பகிர்வு*