ஐப்பசி மாதம்12 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள்
துன்பம் தான் இறைவனை நினைக்கத் தூண்டும் தூண்டுகோல் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். துன்பம் வருவதற்கு முன்னால் இறைவனை கெட்டியாக பற்றிக் கொண்டால் துன்பம் தூர நிற்கும்.
எந்த ஒரு விஷயத்தையும் உடனே முடிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம்!
”நீ உச்சி சென்று காண விரும்பினால் மெல்ல மெல்ல கீழ் மட்டத்திலிருந்து துவங்கு” என்ற பொன் மொழியை நினைத்து பாருங்கள்.
எதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
எதையும் ஜீரணம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
“இறை நாமத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்” இதுவே வெற்றி வாழ்வின் இலக்கணம்.
விரலின் இடுக்கின் வழியே தண்ணீர் ஒழுகி விடுவது போல் வெற்றியும் வீணாகி விடக்கூடும்.
ஆகவே முயற்சி, உழைப்பு என்பனவற்றால் தியானத்தோடு வெற்றியை இறுக்கமாக பிடியுங்கள் என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார்.
புதிய உண்மைகளையும், சத்தியங்களையும் “பொய் உபதேசம்” என்றும், மூடநம்பிக்கை எனவும் கூறுவது வழக்கமாகிவிட்டால் வெற்றி தாமதப்படும்.
இலக்கு நோக்கி பயணம் செய்யுங்கள். சந்தேகத்தோடு தாமதம் செய்யாதீர்கள். இலக்கைத் தேடிக் கொண்டே செல்லுங்கள் எதுவும் கடினமாய் இராது வெற்றி உங்களுடையதே!
இறைவன் மேல் பக்தி என்பது ஒரு சாரருக்கோ குறிப்பிட்ட சாதினருக்கோ ஒதுக்கப்பட்டதல்ல
எல்லோருக்கும் பொதுவானது குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகாமல் இறைவனை உள்ளத்தில் வைத்துக்கொண்டு ஞானம் பெற முயற்சிப்பதே சிறந்த வழியாகும்.