ஐப்பசி மாதம் 18 ம் நாள் சனிக்கிழமை 04-11-2023
நல்லதைப் பேசு வல்லமை பெறுவாய்
தன்னை தானே ஜெயிப்பதற்கு புரியும் போராட்டம் தான் எல்லா போராட்டங்களிலும் மிகப்பெரியது.
என்ற பழமொழி முற்றிலும் உண்மையானது தான். தன் மன ஓட்டத்தை இறைவன் பக்கம் திருப்பி திருத்தி வெற்றி பெற்றவர்களே மகாவீரர்கள்.
நல்லவன் எல்லோருக்கும் துணை புரிகிறான் அவன் யாரையும் ஒதுக்குவதில்லை.
ஒருவரைப் பற்றி தேவையற்ற விமர்சனம் செய்வதால் உனக்கு பல வழிகளில் கேடு வரும், இதனால் நல்லதை பேசி குருவின் ஆசியைப் பெற முயற்சி செய்.🧘🏻♂️
பிறரைப் பற்றி தவறாக விமர்சிப்பதால் உங்கள் இறை தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டு இருள் மயமாகும்.
இதனால் குருவின் ஆசி கிட்டாது. இதை உணர்ந்து உடனே மாற்றிக் கொள்பவன் அறிவாளி.
குருவைப் பற்றி தவறாக விமர்சிப்பவன் இறைவனால் மன்னிக்கப்படாதவன்.
நீ ஒருவரை கேவலமாக விமர்சிக்கும் போது உன்னை தேவர்களும், ஞானிகளும், உன் அருகில் இருந்து கொண்டே கண்டிப்பது உன் ஊனக் கண்ணிற்கு தெரியவில்லை.
நீ தொண்டு செய்ய நினைத்தால் உன்னை திருத்திக் கொள்வதே முதல் தொண்டாகும்.
புறம் பேசுபவர்களின் பேச்சை கேட்காதே. ஒற்றுமையை வளர்க்க பாடுபடு.
நல்லதைப் பற்றி சிந்தனை செய்யுங்கள்.
ஒருவர் செய்த நல்லதை நினைத்து பகவானிடம் நன்றி சொல்லுங்கள்.
மனதில் தவறான எண்ணங்கள் வந்தால் இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள்.
மற்றவர்களுக்காக பகவானிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.