ஐப்பசி மாதம் 17 ம் நாள் வெள்ளிக்கிழமை 03-11-2023
புதிய உண்மைகளையும், சத்தியங்களையும் “பொய் உபதேசம்” என்றும், மூடநம்பிக்கை எனவும் கூறுவது வழக்கமாகிவிட்டால் வெற்றி தாமதப்படும்.
இலக்கு நோக்கி பயணம் செய்யுங்கள். சந்தேகத்தோடு தாமதம் செய்யாதீர்கள். இலக்கைத் தேடிக் கொண்டே செல்லுங்கள் எதுவும் கடினமாய் இராது வெற்றி உங்களுடையதே!
இறைவன் மேல் பக்தி என்பது ஒரு சாரருக்கோ குறிப்பிட்ட சாதினருக்கோ ஒதுக்கப்பட்டதல்ல
எல்லோருக்கும் பொதுவானது குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகாமல் இறைவனை உள்ளத்தில் வைத்துக்கொண்டு ஞானம் பெற முயற்சிப்பதே சிறந்த வழியாகும்