ஐப்பசி மாதம் 4_ம் நாள் சனி கிழமை 21-10-2023
வாழ்க்கையில் முன்னேறுவது சுலபமல்ல. ஆனால் அதன் நெளிவு சுளிவுகள் பிடிபடுமானால் முன்னேற்றத்திற்கு தடை இல்லை.
ஆற்றில் விழுந்த இலை அக்கரையை அடைகிறது. ஆற்றில் விழுந்த கல் அடித்தளத்தில் புதைகிறது. எதிலும் மிதக்க கற்றுக்கொள்ளுங்கள் மூழ்கி விடாதீர்கள்.
சில இழப்புக்கள் உங்களுக்கு வலியை தந்திருக்கலாம். ஆனால் அந்த சில இழப்புக்கள் தான் உங்களுக்கு வலிமையை தருகின்றது என்பதை மறக்காதீர்கள்.
உங்கள் முயற்சிகளை கைவிடாதவரை நீங்கள் தோல்வி அடைந்தவர் இல்லை.
ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் சிறு சிறு முயற்சிகளின் கூட்டுத்தொகை தான் வெற்றி.