குழப்பமில்லாத தன்மை. எப்பொழுதும் சற்குருவாகிய பரமாத்மாவிடம் நிலைத்து நிற்பது.
அதன் பயனாக பேரானந்தத்தை பெறுவது.
இருளில் பொதிந்து கிடந்த ஜீவன் பேரொளியான இறைவனோடு ஐக்கியமாதல்.
இந்த நிலை கிடைக்கின்ற போது எல்லாம் கை கூடும்.
மனிதனுக்கு உடன் இருக்கும் உறவினர் யார்?
“சற்குரு தியானத்தால்” வயப்படுத்தப்பட்ட மனமே அவனுக்கு நிலையான உறவு.
பகைவன் யார்?
சிரத்தை இல்லாத காரணத்தால் இறைவனை (சற்குரு) நினைக்க முடியாது.
இப்படிப்பட்டவர்களின் மனம் தன் வயப்படாது
அதுதான் தான்தோன்றித்தனமாக திரியும். இந்த மனமே மனிதனது பகைவன்.
செய்யத் தகுந்த நல்ல காரியங்களை, எந்த பலனையும் எதிர்பார்க்காது, “மக்கள் ஞானம் பெற” உழைப்பவரே சன்னியாசி எனப்படுவார்.
அனுதினமும் மனதார உச்சரிப்போம்
ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க !!
ஓம் சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க !!
ஓம் சற்குருநாதர் வாழ்க! வாழ்க !!