உன் வாழ்வில் நீ யாரோடெல்லாம் சிரித்து மகிழ்ந்தாய் என்பது உனக்கு மறந்து போகலாம் ஆனால் யாரோடு சேர்ந்து அழுதாய் என்பது உனக்கு மறக்காது.
முகமறியாத ஒரு புதியவனுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல்களை ஒருவன் செய்தால் அவனே நல்ல மனிதர்
ஆசையை வென்றவன் மகிழ்ச்சி அடைவான் மற்றவரிடம் அன்பு உள்ளவன் உலகை ஆள்வான்.
துன்பம் தான் இறைவனை நினைக்கத் தூண்டும் தூண்டுகோல் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
துன்பம் வருவதற்கு முன்னால் இறைவனை கெட்டியாக பற்றிக் கொண்டால் துன்பம் தூர நிற்கும்.
எந்த ஒரு விஷயத்தையும் உடனே முடிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம்;