இன்று ஐப்பசி மாதம் 11ம் தேதி சனிக்கிழமை பௌர்ணமி 28-10-2023
இட்டுக்கெட்டார் எங்குமே இல்லை
வேதனை பட்டுக் கொண்டிருப்பவருக்கு ஒரு துளி கூட ஞான முன்னேற்றம் இருக்காது. உள்ளத்தில் கோயிலை வைத்து விட்டு தன் முனைப்போடு
பகவான் மேல் நம்பிக்கை வைத்து ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க! என்று மந்திரம் கூறி முயலும் யாவரும் ஞானத்திலும், பொருள் ஈட்டுவதிலும் வெற்றி பெறுவது உறுதி.
மனதில் பகவானை இட்டவர்களே அதாவது நினைத்துக் கொண்டு இருப்பவர்களே சான்றோர்கள்.
கடவுள் எங்கோ இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டிருப்பது ஒரு வகையில் அஞ்ஞானமேயாகும் (அறியாமையாகும்).
கடவுள் நமது உள்ளத்தில் குடி கொண்டிருக்கிறார் என்று உணரும்போது ஞானம் உதயமாகிறது.
அருளை தேடுபவர் அதை இழப்பதில்லை. பொருளைத் தேடுபவர் அதை இழந்தே ஆக வேண்டும்.
காலத்தை சரியாக பயன்படுத்தி கடவுளை மனதில் இட்டவர் ( வைத்தவர்) காலத்தை வென்றவராகிறார். எதிலும் வெற்றி பெறுவார்.
கடவுள் நினைப்போடு தான, தர்மம் செய்பவர்களை இறைவன் ஒருபோதும் கைவிட மாட்டார்.
அன்னதானம், பூமிதானம், பொருள்தானம், ஞான தானம், இரத்த தானம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் இதை முன்வந்து செய்பவர் யாரோ ஒரு சிலரே.