தங்கத்தில் செய்த தேராக
இருந்தாலும் தேவை முடிந்ததும் ஒராமாக தான் நிறுத்தப்படும். அது போலத்தான் சில உறவும் ஓரமாக நிறுத்தப்படுகிறார்கள்.
கோபத்தைக் காட்டி ஒரு மனம் அடைந்த காயத்தைக் காட்டிலும், அன்பைக் காட்டி ஏமாற்றியதால் வந்த காயமே யாராலும் குணப்படுத்த முடியாத காயமாகும்.
மற்றவர் மனதை உடைக்கும்போது நினையுங்கள். நாளை நம் மனதையும் உடைக்க இரு மடங்கு வருவார்கள் என்று.
குத்தி கிழிக்கிற முள்ளாய் இருந்தாலும் சரி. குத்திக்காட்டுற மனிதர்களாக இருந்தாலும் சரி தூக்கி ஓரமா போட்டு விடுங்கள். இல்லையென்றால் மறுபடியும் உங்களைத் தான் காயப்படுத்தும்.
