இன்றைய நாள் இறை நினைப்புடன் கூடிய இனிய நன்நாளாக அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்
இன்று : கிருத்திகை புரட்டாசி (16-ம் நாள்)03-10-2023 (செவ்வாய்)
இறைவன் யாருக்கு நன்மை செய்ய நாடுகின்றாரோ, அவருக்கே அதிக துன்பங்களை தருகிறார்.
சோதனைகள் பெருகுவதை பொருத்தே பகவானுடைய சன்மானமும் கிடைக்கிறது.
இறைவன் நமது உள்ளத்தில் தான் குடி கொண்டிருக்கிறார்.
“உடலின் இன்ப உணர்வுகளை நாம் ஒதுக்கி தள்ள முடியுமானால் பகவானை நம் உள்ளே உணர முடியும்.”
ஆழமாக வேர் பிடிக்காத மரத்தை காற்று தள்ளிவிடும் அல்லவா!.
அதுபோல் உள்ளத்தில் ஆழமாக இறைவனை பற்றி இருக்காதவர்களை மாயை என்னும் காற்று நரகத்தில் வீழ்த்தி விடும்”.
“தூய மனம் படைத்த இறை பக்தன் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய அமைதியை இழப்பதில்லை.
தீயிலிட்டு சுடச்சுட பொன் ஒளி பெறும்.
அதுபோல துன்பங்கள் தொடர தொடர அவற்றை பொருட்படுத்தாது தவம் செய்கிறவருக்கு தவ வலிமை கூடும்.
வள்ளுவர்
சௌக்கியம் எது? பற்றிய முசுகுந்த சக்கரவர்த்தியின் வரலாறு
அனுதினமும் மனதார உச்சரிப்போம்
ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க !!
ஓம் சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க !!
ஓம் சற்குருநாதர் வாழ்க! வாழ்க !!