இன்று புரட்டாசி 28, ஞாயிற்றுக்கிழமை
15-10-2023
மனிதன் துன்பங்களையும் பிரச்சனைகளையும் சுமந்து வாழ இறைவனால் நிர்பந்திக்கப்படுகிறான்.
இதிலிருந்து மீண்டு வர இறைவன் உதவியை மனிதன் நாடும் போது பக்தி கூடுகிறது.
அப்பொழுது முள்ளை முள்ளால் எடுப்பது போன்று மனிதனை வைத்து மனிதனுக்கு இறைவன் உதவுவார்.
ஒருவரிடம் உதவி பெற்றவன் காரியமாக இருந்து உதவியவருக்கும், காரணமாக இருந்து உதவி செய்த இறைவனுக்கும் நன்றி விசுவாசத்தை செலுத்த வேண்டும்.
இதை மறக்கும் போது மீண்டும் சாக்கடையில் தள்ளப்படுகிறான். இதற்கு மனம் அறிவோடு சேராதது தான் காரணம்.
இந்த விசுவாசக் குறைவாலும் இறை நினைப்பு குறைவாலும், இறை நினைப்பு உள்ளவர்களுக்கு அவ்வபோது இடைவெளி என்ற ஓட்டை விழுவதாலும் திரும்பத் திரும்ப பிரச்சனை வருகிறது.
இறைவனோடு மனிதன் இணைவதற்கு பக்தி,ஞான பயிற்சி, குரு வணக்கம், பெற்றோர்களுக்கு கடமை செய்தல் நன்றி விசுவாசம் இவைகள் இன்றியமையாதவைகள
இதையெல்லாம் விட பிறருக்கு தீங்கு செய்யாதிருத்தல் மிக சிறப்பானதாகும். இதற்கு மனிதன் பங்கே அதிகம்.