இன்று சர்வ ஏகாதசி புரட்டாசி 23 செவ்வாய்க்கிழமை 10-10-2023
“நீ உச்சி சென்று காண விரும்பினால் மெல்ல மெல்ல கீழ் மட்டத்திலிருந்து துவங்கு”என்ற பொன்மொழியை நினைத்துப் பார். “எதையும் ஏற்றுக்கொள்: எதையும் ஜீரணம் செய்ய கற்றுக் கொள். இறை நாமத்தை சொல்லிக் கொண்டிரு” இதுவே வெற்றி வாழ்வின் இலக்கணம்.விரல் இடுக்கின் வழியே தண்ணீர் ஒழுகி விடுவது போல் வெற்றியும் வீணாகி விடக்கூடும்.ஆகவே முயற்சி, உழைப்பு என்பனவற்றால் தியானத்தோடு வெற்றியை இறுக்கமாக பிடி என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார்
