ஆசையை விட்டால் ஆனந்தம் பொதுவாக ஆசை காரணமாக பலனை எதிர்பார்த்து செயல்படுபவன் அந்த செயலுக்குள்ளேயே கட்டுப்பட்டு விடுகிறான்.பலன் தனக்குத் தேவையில்லை என்று செயல் புரிவதை ஒரு யோகமாகக் கொண்டவன் நிலையான மன நிம்மதியை அடைகிறான்.எதைக் கண்டும் ஆசைப்படாமலும் அதிர்ச்சி அடையாமலும் யாருடைய மனம் பற்றற்ற நிலை கொண்டு திகழ்கிறதோ அந்த மனிதருக்கு உரியவர் பூமியிலேயே பிறப்பு இறப்பு அறுத்தவராகி விடுகிறார்.அத்தகைய சமநோக்கு கொண்டவர்கள் ஈஸ்வரனுக்கு சமமானதாகி விடுகிறார்கள். ஆசைப்பட வேண்டிய விஷயங்களில் எப்பொழுது ஒருவருக்கு மனதில் வெறுப்பு ஏற்படுகிறதோ அப்பொழுதே அவருக்கு யோக நிலைக்கு ஏற்ப மன பக்குவம் ஏற்பட்டு விட்டதாக உணர வேண்டும். உடலால் இல்லாது அறிவால் அறியப்படுவது தான் சுகம் என்ற உண்மையை உணர்ந்து கொள்வதும்,எந்தவித துக்கம் வந்தாலும் சற்றும் அசையாத மனநிலை தான் பரிபூரண யோக நிலை. “மனச் சலனமின்றி, மனதின் அச்சமின்றி மனதை ஒருநிலைப்படுத்தி பகவானிடம் மட்டுமே இலயித்து நிற்பவன் யோக நிலையை அடைந்தவனாகி விடுகிறான்” என்று கீதை கூறுகிறது.
எல்லா விஷயங்களிலும் ஒரு அளவான நிலையை கையாளுவது ஒருவித யோகம் தான்
அனுதினமும் மனதார உச்சரிப்போம்
ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க !! ஓம் சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க !!