பக்தி – பகவான் மேல் மனம் – இடைவெளி இல்லாது நினைத்தல் பக்தி யோகம் – நினைப்பால் உயர்வு பெறுதல்
உலக விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டே இறைவனை அடைய முடியும் என்று கீதையின் பக்தி மார்க்கம் மிகச் சிறப்பாக கூறுகிறது!
எவர் ஒருவர் பிரதிபலனை எதிர்பார்க்காது கர்மத்தில் ஈடுபடுகிறாரோ- யார் எது வந்த போதிலும் பகவான் துணையை அவர் பாதத்தை பலமாக பிடித்துக் கொள்கிறாரோ அவரே சிறந்த பக்தர்.
இறைவனுக்கு செய்யும் தொண்டு தான் எல்லாவற்றிற்கும் உயர்வானது என்று அவர் தனது சுய அனுபவத்தில் உணர்கின்றாரோ,அவரே மிக சிறந்த பக்தர்.
இப்படி பக்தி யோகத்தின் சிறப்பை கீதை நமக்கு எடுத்துக் கூறுகிறது.பொதுவாக நமது அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நித்திய கடமைகளை செய்ய வேண்டியது மிக மிக அவசியமாகும்.
உள்ளத்தில் மானசீக கோயிலில் இறைவனுக்கு பூஜை செய்வது. எவ்வளவு வேலைகள் இருந்த போதும் 10 நிமிடம் அமைதியாக அமர்ந்து பகவான் மேல் பக்தியுடன் மந்திரம் சொல்லி வணங்கி வர வேண்டும்.
கடுமையான சோதனை, பிரச்சனை வரும் போது மனம் தளராது மந்திரங்கள் சொல்லி பகவான் காலில் பூ போட்டு வணங்கி வந்தால் சோதனை மறைந்து நல்லதாக மாறிவிடும்.
குறிப்பு உணவு பதார்த்தங்களில் உப்பு சேர்ப்பது போல் பக்தியோகம் எளிமையானது, அருமையானது உலக வாழ்வில் இருந்து கொண்டு இறைவனைக் கொண்டு வந்து சேர்த்து நிலை நிறுத்தி அவரின் காலை பற்றி கொண்டு நினைப்பது. இதனால் இம்மை, மறுமை உறுதியாகவெற்றி பெறுவார்.