ஐப்பசி மாதம் 5_ம் நாள் அஷ்டமி
ஞாயிறு -22-10-2023
தியானம் கூடும்போது அடக்கம் நம்மை ஆக்ரமித்துவிடும்
. 🍂 இதனால் மகிழ்ச்சியை விட மேலான இறை அம்சம் கொண்ட ஆனந்தம் உள்ளத்திலும், உடலிலும் பரவி நிற்கும்.
🍂 எல்லோருக்கும் நல்லதையே செய்ய விரும்புவது, கெடுதலில் ஈடுபடாத மனம், சத்தியம், மென்மை, அடக்கம் கொண்ட மனிதர்களே உத்தமர்கள்.
🍂 மனிதன் அறிவினாலேயே பயத்தை நீக்குகிறான். சற்குரு தியானத்தினால் சகல நன்மைகளும் அடைகிறான்.
🍂 குருவுக்கு பணிவிடை செய்வதால் ஞானத்தை அடைகிறான். யோகத்தினால் அமைதியை பெறுகிறான்.
🍂 பொதுவாக ஏதாவது ஒரு வகையில் உங்களிடம் குறைகள் இருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை.
🍂 நீங்கள் இறைவனை நினைக்க ஆரம்பித்தால் குறைகள் நீங்கி உயர்வு பெற வழிகாட்டியாகிய குருவின் தொடர்பு கிடைக்கும்.