Tuesday, November 28, 2023
பொதுஉங்களுக்கு தெரியுமா சரஸ்வதி முக்கியத்துவம் என்ன? எவ்வாறு பூஜிக்க வேண்டும்

உங்களுக்கு தெரியுமா சரஸ்வதி முக்கியத்துவம் என்ன? எவ்வாறு பூஜிக்க வேண்டும்

ஐப்பசி மாதம் 5_ம் நாள் திங்கட்கிழமை ; கரிநாள்; நவமி;சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை

நவராத்திரி விழாவின் 9 வது நாளை, அதாவது நிறைவு நாளை நாம் சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகிறோம்.சரஸ்வதி பூஜை படிப்பதற்கு உரிய நாள் குருவை நாம் மதித்து, மரியாதை செலுத்துவதால் குருவின் அருளுடன் சேர்த்து, தெய்வத்தின் அருளும் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

இந்த நாளில் சரஸ்வதி படம் இருந்தால் அதை வைத்து வழிபடலாம்.

அப்படி இல்லாவிட்டால், வீட்டில் இருக்கும் மற்ற சாமி படங்களை சுத்தம் செய்து, துடைத்து மஞ்சள்- குங்குமம் அல்லது சந்தனம் – குங்குமம் வைக்க வேண்டும்.

என்ன மலர்கள் கிடைக்கிறதோ அதை வைத்து அலங்காரம் செய்து விட்டு, நெய்வேத்யத்திற்கு கண்டிப்பாக ஒரு இனிப்பு வகை செய்து வைக்க வேண்டும்.

அதோடு ஏதாவது ஒரு வகை சுண்டல், பொரி, அவல், கடலை ஆகிவற்றுடன் பழங்கள் வைத்து அம்மனை வழிபட வேண்டும்.

நவராத்திரி விழாவின் 9 வது நாளை,

அதாவது நிறைவு நாளை நாம் சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகிறோம்.

இந்த நாளில் கொலு வைத்தவர்கள், வைக்காதவர்கள் என அனைவரும் பூஜை செய்து, வழிபடக் கூடிய நாள்.

வீட்டில் படிக்கின்றன குழந்தைகள் இருந்தால் அவர்கள் படிக்கும் புத்தகங்கள், அலுவலகம் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் கோப்புக்கள் போன்றவற்றை பூஜையில் வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்

வீடுகளில் பொதுவாகவே ராமாயணம், மகாபாரதம், திருக்குறள், பன்னிரு திருமுறைகள் போன்ற தெய்வீக தன்மை வாய்ந்த புத்தகங்களை வைத்திருக்க வேண்டும்.

இந்த புத்தகங்களை சாமி படங்கள் முன் வைத்து, வீட்டில் உள்ள படிக்கின்ற குழந்தைகளின் புத்தகங்களையும் வைத்து தீப, தூபம் காட்டி வழிபட வேண்டும்.

ஒருவேளை வீட்டில் இசை, நடனம், இசை கருவிகள் வாசிக்க கற்றுக் கொள்பவர்கள் இருந்தால், அது தொடர்பான பொருட்களையும் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும்

பூஜை முடிந்ததும் படிப்பவர்கள் இருந்தால் புத்தகங்களை எடுத்து படித்தும்,

இசை கருவிகள் இருந்தால் அவற்றை கண்டிப்பாக இசை கருவிகளை வாசிக்கவும் வேண்டும்.

நாம் கற்ற கலையை சரஸ்வதி பூஜை நாளில் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

சரஸ்வதி பூஜையில் வைத்து வழிபட்ட பொருட்களை எடுக்கக் கூடாது.

அடுத்த நாள் தான் எடுத்து பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கற்றது அத்தனையும் மறந்து விடும் என சிலர் சொல்வார்கள்.

ஆனால் இவ்வாறு செய்வது தவறான செயலாகும்.

சரஸ்வதி தேவி நமக்கு அருளிய ஞானத்தை, கலையை நாம் மேலும் வளர்த்துக் கொள்ள அன்றைய தினம் அந்த கலையை அவளுக்கு அர்ப்பணித்து, சரஸ்வதி தேவியின் அருளையும், ஆசியையும் பெற வேண்டும்.

சரஸ்வதி பூஜை, விஜயதசமி அன்று தான் வித்யாரம்பம் என்ற கல்வியை துவக்கும் நாளாக வைத்துள்ளோம். அதனால் சரஸ்வதி பூஜை படிப்பதற்கு உரிய நாள்.

அதோடு நாம் ஏதாவது கலையை கற்றுக் கொண்டிருந்தால் அதை கற்றுத் தரும் குருவிற்கு நிச்சயம் மரியாதை செலுத்த வேண்டும். அப்படி குருமார்கள் அருகில் இருந்தால், ஏதாவது பொருள் வாங்கிக் கொடுத்தும், அவர்களிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும்.

குருவை நாம் மதித்து, மரியாதை செலுத்துவதால் குருவின் அருளுடன் சேர்த்து, தெய்வத்தின் அருளும் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe Today

GET EXCLUSIVE FULL ACCESS TO PREMIUM CONTENT

SUPPORT NONPROFIT JOURNALISM

EXPERT ANALYSIS OF AND EMERGING TRENDS IN CHILD WELFARE AND JUVENILE JUSTICE

TOPICAL VIDEO WEBINARS

Get unlimited access to our EXCLUSIVE Content and our archive of subscriber stories.

Latest

Latest article

More article