ஐப்பசி 1 புதன்கிழமை சதுர்த்தி விரதம் சுப முகூர்த்த நாள். 18-10-2023
கடவுளின் மாபெரும் பரிசு நண்பர்கள்………
பேச்சுத் துணைக்கு
சில நண்பர்கள் வேண்டும்
பேசும்போது
பேசாமல் இருக்க
சில நண்பர்கள் வேண்டும்
துன்பங்களைப்
பகிர்ந்துகொள்ள
சில நண்பர்கள் வேண்டும்
தூங்கும் போதும்
காத்திருக்க நல்ல
சில நண்பர்கள் வேண்டும்
நடைபயிற்சிக்கு
துணையாக
சில நண்பர்கள் வேண்டும்
நல்லது கெட்டது சொல்ல
சில நண்பர்கள் வேண்டும்
பயணங்களின் போது
பேசி மகிழ
சில நண்பர்கள் வேண்டும்
படித்ததில் சிலவற்றை
பகிர்ந்து கொள்ள
சில நண்பர்கள் வேண்டும்
அறிவுரை சொல்ல
சில நண்பர்கள் வேண்டும்
அன்பே உருவான
சில நண்பர்கள் வேண்டும்
ஆற்றல் நிறைந்த
சில நண்பர்கள் வேண்டும்
ஆலயங்களுக்கு செல்ல
சில நண்பர்கள் வேண்டும்
அடித்து திருத்த
சில நண்பர்கள் வேண்டும்
அணைத்துக்கொள்ள
சில நண்பர்கள் வேண்டும்
குடும்ப உறவாக
சில நண்பர்கள் வேண்டும்
குதூகலமாய் இருக்க
சில நண்பர்கள் வேண்டும்
கொடுப்பதற்கு
சில நண்பர்கள் வேண்டும்
கேட்பதற்கு
சில நண்பர்கள் வேண்டும்
தடுத்து நிறுத்த
சில நண்பர்கள் வேண்டும்
தட்டிக்கொடுக்க
சில நண்பர்கள் வேண்டும்
புகழ்ந்து பேச
சில நண்பர்கள் வேண்டும்
புரட்சிகள் செய்யும்
சில நண்பர்கள் வேண்டும்
பொறுமை மிகுந்த
சில நண்பர்கள் வேண்டும்
பொறுப்பான
சில நண்பர்கள் வேண்டும்
புண்ணியம் செய்கின்ற
சில நண்பர்கள் வேண்டும்
புறம் பேசாத
சில நண்பர்கள் வேண்டும்
படைத்தலைவன் போல்
சில நண்பர்கள் வேண்டும்
படித்ததை சொல்ல
சில நண்பர்கள் வேண்டும்
பாசத்தை கொட்ட
சில நண்பர்கள் வேண்டும்
பக்குவமாய்
எடுத்துச் சொல்ல
சில நண்பர்கள் வேண்டும்
ஓடி விளையாட
சில நண்பர்கள் வேண்டும்
உதவி என்றால் ஓடோடி வர
சில நண்பர்கள் வேண்டும்
உயிருக்கு உயிராய பழகிட
சில நண்பர்கள் வேண்டும்
இவை அனைத்தும்
கலந்த ஒரு நண்பன்
எப்போதும் உடன் வேண்டும்
அது யார் என்று
நீங்கள் அறியவேண்டும்
அந்த நட்பை எந்நாளும் போற்றி தொடர்ந்திடவேண்டும்
அதுவரை கிடைக்கின்ற
நல்ல நட்பை போற்றிட வேண்டும்