நம்மைப் போன்று மற்றவர்களையும் நினைப்பதே மனித நேயம்
புரட்டாசி 27 ; சனிக்கிழமை 14-10-2022
தவத்தை கீழே உள்ளவாறு இருக்க வேண்டும்
புனித நீராடி உடல் சுத்தம் பெற்று,
பிரம்மசரிய விரதத்தை கடைபிடித்து ஞானகுரு, சற்குரு ஆகியோரை பூஜித்து வரும் தவம் சரீரத்தால் செய்யப்படுவதாகும்.
பொதுவாக தனது வாழ்க்கையில் உண்மையையும், நல்லதையும் பேசி யாரையும் புண்படுத்தாது கனிவாக உரையாடுதல்,
வேதம் ஓதுதல் ரபோன்றவற்றினால் செய்யும் தவம் வாக்கினால் செய்யப்படுவதாகும். சாதுத்தன்மை, சாந்தமாக இருக்கும் இயல்பு, மனக்கட்டுப்பாடு, உள்ளத்தெளிவு,
தனது ஆன்மாவை அன்றி வேறு சிந்தனை இல்லாது இருத்தல் ஆகிய இந்த அடிப்படையில் பின்பற்றப்படுவது தனது மனத்தினால் செய்யப்படும் தவமாகும்.
இதனால் நாம் எச்சரிக்கையாக நேரத்தை வீணாக்காது நமது மனதிற்கு பயிற்சி கொடுத்து வர வேண்டும் முடியாது என்று ஒன்றுமே இல்லை முயன்றால் உங்களால் முடியும்.
நம்மைப் போன்று மற்றவர்களையும் நினைப்பதே மனித நேயம்