மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82) காலமானார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமனார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். கலைஞர் மீதும், கழகத்தலைவர் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.
மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்”
-உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்
ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை இரவு 8 மணி முதல் 10 மணி வரை 6 நிமட இடைவெளியில் இரு வழித்தடங்களிலும் ரயில்கள் இயக்கப்படும்”
-சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு
சென்னையில் இருந்து இன்று இரவு 7.20 மணிக்கு மதுரை செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் மற்றும் மதுரையில் இருந்து மறுமார்க்கமாக சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி
விமான சேவை ரத்து செய்யப்பட்டதற்காக முறையான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், விமானிகள் பணிக்கு வராததால் ரத்து என தகவல்
பாலஸ்தீன அதிபர் மஹ்மொத் அப்பாஸ் உடன் பிரதமர் மோடி பேச்சு
காசாவில் மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்
பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதாகவும் உறுதி
இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு குறித்து மீண்டும் வலியுறுத்தினார்
நெல்லை – சென்னை சிறப்பு ரயில் இயக்கம்
தசராவையொட்டி நெல்லை – சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
சென்னையில் இருந்து நாளை இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு 21ம் தேதி காலை 9.45 மணிக்கு நெல்லை சென்றடையும்
நெல்லையில் இருந்து 24ம் தேதி மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு 25ம் தேதி அதிகாலை 4.20 மணிக்கு சென்னை சென்றடையும்
தசரா விழாவை ஒட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்கம்
பங்காரு அடிகளார் மறைவு – பிரதமர் இரங்கல்
மனித குலத்திற்கான தனது அயராத சேவை, கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை, அறிவை விதைத்தார்
பங்காரு அடிகளாரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது – பிரதமர் மோடி X
தளத்தில் இரங்கல் பதிவு
பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு 6 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உட்பட 2500 போலீஸார் பாதுகாப்பு
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீட்டில் இருந்து புறப்பட்டார்