ஐப்பசி மாதம் 8_ம் நாள் ०ஏகாதசி० புதன்கிழமை -25-10-2023
அமைதியாக ஓடும் நதி ஆழமாக இருக்கும்
ஒரு பக்தன் அமைதியாக செயல்படுகிறான் என்றால் அவனது உள்ளம் என்ற பெருங்கோயிலில் தொடர்ந்த, ஆழமான இறை நினைப்போடு இருக்கிறான் என்று அர்த்தமாகும்
தனது பகல் பொழுதில் பலவிதமான வேலைகள் செய்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது மந்திரம் கூறி பகவானிடம் தொடர்பு வைத்துக் கொண்டால் பொறுமை தானாகவே வந்துவிடும்.
இளமையில் அவ்வப்போது உழைப்பதோடு பொறுமையாக இறைவணக்கம் செய்பவர் முதுமை வரை செல்வ செழிப்புடன் வாழ்வர்
அடக்கம் ஆயிரம் பொன் தரும்
நமது மானசீக கோயிலில் பகவானின் காலடியில் மந்திரம் கூறிக் கொண்டே அடக்கமாக அமர்ந்திருந்தால் மனம் ஒருநிலைப்படும் ஒரு.காரியங்கள் சித்தியாகும் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
அடங்க தெரியாதவனுக்கு ஆள தெரியாது
பகவானை உள்ளத்தில் வைத்து அவரது வலது பக்கத்தில் அடக்கமாக அமர்ந்து தியானிக்க தெரிந்தவருக்கு தன்னைப்போல மற்றவர்களையும் உருவாக்கிவிட முடியும்.