கோயிலில் நடக்கும் பூஜை என்பது நீங்கள் உங்கள் உள்ளத்தில் மானசீகமாக செய்யப்போகும் பூஜைக்கு ஒரு பயிற்சி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
இந்த பூஜையை நீங்கள் அன்றாடம் மானசீகமாக மனதில் கொண்டு வந்து செய்து பழக வேண்டும்
இது போட்டியில் கலந்து கொள்ளும் முன்பு பயிற்சியை வெளியில் செய்து பார்ப்பது போன்றதாகும்.
திடீரென ஒன்றின் மீது மிகுந்த ஆசையோ, ஆத்திரமா வருகிறது. இந்த வேலையை மனம் செய்கிறதா? அல்லது புத்தி செய்கிறதா?
மனம் தான் புத்தியை ஆலோசிக்காமல் அவசரப்பட்டு செய்கிறது.
புத்தியுடன் சேர்ந்து சிந்தித்து செயல்படும்போது நல்ல மனமாக இருக்கிறது.
அப்பொழுது மிகுந்த ஆவலுடன் எதையும் எதிர்பார்க்காது பகவானை பற்றி கொண்டிருக்கும்.
இதனால் கடமையும் எடுத்த காரியமும் சரியாக நடக்கும்.
எப்படி மனதை அடக்குவது?
குதிரையை அடக்கி வேலை வாங்க கடிவாளம் மிக முக்கியமாகும்.
யானையை வேலை வாங்க அங்குசம் ரொம்ப அவசியமாகும்.
இதைப் போன்று மனதை அடக்க நல்ல குருநாதரிடம் பணிந்து அவர் சொல் கேட்டு தியான பயிற்சி செய்ய வேண்டும்.
வைராக்கியம் என்ற அங்குசமும், பயிற்சி என்ற கடிவாளமும், மனதை படிப்படியாக அடக்கும்.