Wednesday, November 29, 2023
ஆரோக்கியம்நீங்கள் உண்ணும் உணவு எப்படி இருக்க வேண்டும்?|How should the food you eat be?

நீங்கள் உண்ணும் உணவு எப்படி இருக்க வேண்டும்?|How should the food you eat be?

நோயின் வலையில் விழாமல் இருக்க உங்கள் இலையில் இருக்க வேண்டிய உணவுகள்

இன்றைய கால கட்டத்தில் நம் அனைவருக்கு வர கூடிய பிரச்சனைகளுக்கு நாம் உட்கொள்ளும் உணவு பொருட்கள் தான் காரணம்.

இதனை மருத்துவர்களும் கூறியுள்ளனர். நம்முடைய உணவு முறைகள் மாறியதால் ஏற்பட்ட விளைவு தான் பலருக்கு ஆரோக்கியம் இல்லாமல் அதிக நோய்களால் பாதிக்கப்படுகிறோம். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக்க காரணம் நாம் சரியான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது தான். கடைகளில் விற்கும் உணவு பொருள்களில் உள்ள சுவைக்காக நாம் அதனை வாங்கி உண்கிறோம். ஆனால் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி நாம் அப்போது சிந்திப்பதில்லை. நம்முடைய உடல் நிலை சரியாக இல்லாமல் இருக்க முக்கிய காரணம் நம்முடைய சுற்றுசுழலும் மாற்றும் நம் உணவு பழக்கமும் தான்.

ஆறு சுவைகள் கொண்டு இயற்கையில் கிடைக்கும் எல்லா உணவுப் பொருட்களின் சுவைகளையும் வகைப்படுத்தலாம்.

ஆறு சுவைகள் என்பவை

இனிப்பு

புளிப்பு

உப்பு

கசப்பு

காரம்

துவர்ப்பு

இதற்கு மேலாக ஏழாவது ஒரு சுவை இயற்கையில் கிடையாது.

நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களும், வாயு, பித்தம், கபம் என்ற‌ மூன்று தோசங்களைச் சமநிலையிலிருந்து குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்கின்றன.வாயு, பித்தம், கபம் மூன்று தோஷங்களின் சமநிலை ஆரோக்கியத்தையும், அந்த தோசங்கள் நோயையும் உருவாக்குகின்றன.

இனிப்பு, புளிப்பு, உப்பு உடலில் கபத்தை வளர்க்கும், வாயுவைக் குறைக்கும்.

கசப்பு, காரம், துவர்ப்பு பித்தத்தைக் குறைக்கும்.

புளிப்பு, உப்பு, காரம் பித்தத்தை வளர்க்கும்.

இந்த அடிப்படையில் நோய்களின் அந்தந்த தோசங்களுக்கேற்ப பத்தியமான உணவு உட்கொள்ள ஆயுர்வேதம் மருத்துவம் உதவுகிறது.

உணவுப் பொருட்களின் மற்றொரு முக்கியமான குணம் வீரியம் எனப்படும். வீரியம் இரண்டு வகைப்படும். எல்லா பொருட்களும் உஷ்ணம் (சூடு) அல்லது சீதம் (குளிர்ச்சி) என்ற இரண்டில் ஏதாவது ஒரு வீரியம் உடையதாக இருக்கும்.

உடலின் தோசங்களான வாயுவும் கபமும் குளிர்ச்சி தன்மை உடையவை. பித்தம் உஷ்ண குணமுடையது.

அகக் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை உட்கொண்டால் உடலில் வாதமும் கபமும் வளரும். பித்தம் தணியும்.

அதே போல உஷ்ண குணமுடைய உணவுகள் கபம், வாயு இவைகளைக் குறைக்கும். பித்தத்தை வளர்க்கும். எனவே உணவைப் பொறுத்த வரையில் சுவை, வீரியம் இந்த இரண்டு குணங்களை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

சீரண‌ சக்தி

நோயற்ற வாழ்க்கைக்கு சீரண‌ சக்தி இன்றியமையாதது. உடலில் சீரண‌ சக்தி குன்றினால் எல்லா வியாதியும் நம்மைத் தாக்கும். பசியின்மை, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மூலநோய், வயிற்றில் காற்று, உப்புசம், வயிற்று வலி, வயிற்று எரிச்சல், ஏப்பம் இப்படி நாள் தோறும் நாம் எதிர் கொள்ளும் நோய்கள் சீரண‌க் கோளாறினால் ஏற்படுபவை.

  1. மிக அதிகமாகவோ, குறைவாகவோ உணவை உட்கொள்வது,
  1. கால தாமதமாக உணவை உண்பது,
  1. உடலுக்கு ஒவ்வாத அல்லது ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணவுப்பொருட்களை உண்பது,
  1. மலம், சிறுநீர் இவற்றின் வேகத்தை அடக்குவது,
  1. அளவுக்கு மீறி நீர் அருந்துவது,
  1. இரவில் கண் விழிப்பது,
  1. பகலில் உறங்குவது,

கோபம், அச்சம், சோகம் போன்ற உணர்ச்சிகளின் வசப்படுவது இவையெல்லாம் சீரண‌ சக்தியைக் கெடுக்கும்.

இயற்கை வைத்தியத்தில் தாதுஉப்புகள் அதிகம் உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள் போன்றவை முதல் தரமான உணவுகளாகும். 

புரதப் பொருட்கள், மாவுப் பொருட்கள், சர்க்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள். 

இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe Today

GET EXCLUSIVE FULL ACCESS TO PREMIUM CONTENT

SUPPORT NONPROFIT JOURNALISM

EXPERT ANALYSIS OF AND EMERGING TRENDS IN CHILD WELFARE AND JUVENILE JUSTICE

TOPICAL VIDEO WEBINARS

Get unlimited access to our EXCLUSIVE Content and our archive of subscriber stories.

Latest

Latest article

More article