லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்
விஜய்,
த்ரிஷா,
சஞ்சய் தத்,
பிரியா ஆனந்த்,
கௌதம் வாசுதேவ் மேனன்,
மிஷ்கின்,
மன்சூர் அலிகான்,
மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம்
“லியோ”.
அனிருத் இசையமைத்துள்ள
இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ்
நிறுவனம் தயாரித்துள்ளது. லியோ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதன் விமர்சனத்தை நாம் காணலாம்.
படத்தின் முதல்பாதி சூப்பராக இருப்பதாகவும்,
இரண்டாம் பாதி சுமார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம் படம் விறுவிறுப்பாக நகர்கிறது.
நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும்.
ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் லோகேஷின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது மாஸ்டருக்கு சற்று கூடுதலாகவும்..விக்ரமிற்கு கீழாகவும் இந்த படம் இருப்பதாக ரசிகர்கள் கூறி உள்ளனர்.
மேலும் இந்தபடம் படத்தின் கிளைமாக்ஸில் எல்சியுவை(LCU-Lokesh Cinematic Universe) லோகேஷ் சேர்த்துள்ளாராம்.
அதேசமயம் இதுவரை பார்த்திராத ஒரு விஜய்யை இந்த படத்தில் பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.