Wednesday, November 29, 2023
பொதுமொபைல் முத்தம்மா பற்றி உங்களுக்கு தெரியுமா?|Do you know about Mobile Muthamma?

மொபைல் முத்தம்மா பற்றி உங்களுக்கு தெரியுமா?|Do you know about Mobile Muthamma?

மொபைல் முத்தம்மா: ரேஷன் கடைகளில் யு.பி.ஐ.மூலம் பில் செலுத்தும் முறை


சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை, சமையல் எண்ணெய், மாவு வகைகள் போன்றவை விற்கப்படுகின்றன.

மொத்தம் உள்ள, 35,000 ரேஷன் கடைகளில், 33,500ஐ கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன. அந்த சங்கங்களுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்குஉள்ளன.

கூட்டுறவு வங்கிகளில், டிஜிட்டல் முறையில் உடனடி பண பரிவர்த்தனை மேற்கொள்ளும், யு.பி.ஐ., எனப்படும், ‘யுனிபைடு பேமென்ட் இன்டர்பேஸ்’ வசதி, இந்தாண்டு ஏப்ரலில் துவக்கப்பட்டது.

எனவே முதல் முறையாக, ரேஷன் கடைகளில், ‘கியூ ஆர் குறியீடு ஸ்கேன்’ வாயிலாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 602 ரேஷன் கடைகளில் மே மாதம் துவக்கப்பட்டது.

ஜூன் முதல் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட இருந்தது. சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, சென்னையில், 1,700 உட்பட பல மாவட்டங்களில் உள்ள, 9,000 கடைகளில், பே.டி.எம்., செயலி வாயிலாக, பணம் செலுத்தும் வசதி துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மக்களுக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து, ‘மொபைல் முத்தம்மா’ என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

‘மொத்தம் உள்ள ரேஷன் கடைகளில், 20,000 கடைகளுக்கு ஸ்கேனர் கருவிகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 9,000 கடைகளுக்கு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை, சமையல் எண்ணெய், மாவு வகைகள் போன்றவை விற்கப்படுகின்றன.மொத்தம் உள்ள, 35,000 ரேஷன் கடைகளில், 33,500ஐ கூட்டுறவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Subscribe Today

GET EXCLUSIVE FULL ACCESS TO PREMIUM CONTENT

SUPPORT NONPROFIT JOURNALISM

EXPERT ANALYSIS OF AND EMERGING TRENDS IN CHILD WELFARE AND JUVENILE JUSTICE

TOPICAL VIDEO WEBINARS

Get unlimited access to our EXCLUSIVE Content and our archive of subscriber stories.

Latest

Latest article

More article